வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா


வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை நாதருக்கு தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாட்டியாஞ்சலி, தேவாரம், திருவாசகம், இசைப்பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும் நேற்று சனிப்பிரதோஷம் என்பதால் கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவில் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் மகாதேவி மற்றும் சிவனடியார்கள். சிவாச்சாரியார்கள், அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story