சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.

விழுப்புரம்


விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது.இதையொட்டி காலை 7 மணிக்கு 1008 சங்குஸ்தாபனம் பூஜை, ஹோமம், பகல் 12 மணிக்கு பூர்ணாகுதியும், மாலை 4 மணிக்கு பிரதோஷ பூஜையும், 6 மணிக்கு முதல்கால பூஜை, இரவு 9 மணிக்கு 2-ம் கால பூஜை, 11 மணிக்கு 3-ம் கால பூஜை, 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.இதேபோல் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவில், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.


Next Story