மழை, புயலிலும் மங்காத மகாதீபம்...! பக்தர்கள் பக்தி பரவசம்...


மழை, புயலிலும் மங்காத மகாதீபம்...! பக்தர்கள் பக்தி பரவசம்...
x
தினத்தந்தி 10 Dec 2022 10:54 AM (Updated: 10 Dec 2022 11:00 AM)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்ட மகா தீபம் மழை, சூறைக்காற்றிலும் அணையாமல் 5-வது நாளாக எரிந்து வருகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது காட்சி அளிக்கும்.

இந்த நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. இந்த காற்றிலும் 2,668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது.

இதனை பக்தர்கள் பக்தி பரவத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story