மகாளய அமாவாசை: சுருளி அருவியில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
தேனி,
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. கடந்த மாதம் 2-ந்தேதி சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
அருவியல் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று 54 நாட்கள் பிறகு மகாளய அமாவாசையையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர்.
இதைதொடர்ந்து இன்று சுருளி அருவியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அருவியில் புனித நீராடி விட்டு மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், சுருளி ஆண்டவர், ஆதி அண்ணாமலையார் ஆகிய கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story