நெமிலி சரபேஸ்வரர் பீடத்தில் மகாநிகும்பலா யாகம்
நெமிலி சரபேஸ்வரர் பீடத்தில் மகாநிகும்பலா யாகம் நடந்தது.
நெமிலி
நெமிலி சரபேஸ்வரர் பீடத்தில் மகாநிகும்பலா யாகம் நடந்தது.
நெமிலியை அடுத்த கரியாக்குடல் பகுதியில் உள்ள மகா சரபேஸ்வரர் பீடத்தில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மகாநிகும்பலா யாகம் நடைபெற்றது. சரபேஸ்வரர் பீட பீடாதிபதி ஞானபிரகாச சுவாமிகள் முன்னிலையில் ஜவ்வாது மலை சிவத்திரு நிலாநாத வர்மா சுவாமிகள் கலந்துகொண்டு நிகும்பலா யாகத்தை தொடங்கி வைத்தார். இந்த யாகத்தில் பீடத்தில் அமைந்துள்ள மகாசரபேஸ்வரர், பிரத்தியங்கரா மற்றும் சூலாயணி துர்க்கா ஆகிய தெய்வங்களுக்கு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் தாங்கள் எடுத்துவந்த மிளகாயை வேதமந்திரங்கள் கூறியவாறு யாகத்தில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் கலந்து கொண்டால் குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை நீங்கி சுகவாழ்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த யாகத்தில் சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.