காசி விசுவநாதர் கோவிலில் மகாசிவராத்திரி உற்சவம்


காசி விசுவநாதர் கோவிலில் மகாசிவராத்திரி உற்சவம்
x

காசி விசுவநாதர் கோவிலில் மகாசிவராத்திரி உற்சவம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை பஞ்சமூர்த்தி இடபாரூட காட்சி நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் சந்திரசேகர திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் யாளி வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளை மறுநாள் காலை திருத்தேர் கால் புறப்பாடும் மாலையில் மகாசிவராத்திரியை யொட்டி 4 கால அபிஷேகமும் நடை பெறுகிறது. மறுநாள் காலை நடராஜர், சிவகாமசுந்தரி புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி மாலை பிச்சாண்டார் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.


Next Story