மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு பணி


மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு பணி
x

மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு பணி

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வந்தது. வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், கழிப்பறைகள் போன்ற வசதிகள் இன்றி மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர். தொடக்கக் பள்ளியை அடிப்படை வசதிகள் செய்து பராமரிக்க வேண்டும் என்று பெற்றோர், பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியில் பராமரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. தொடக்கப்பள்ளி தார் சாலையில் இருந்து 1 அடி அளவுக்கு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. தற்போது முதல் கட்டமாக பள்ளியின் முன் பகுதியில் உள்ள தாழ்வான பகுதியை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி, மற்றும் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பள்ளியில் பராமரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

---------------


Next Story