பராமரிப்பு பணி:அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
அனுப்பானடி மற்றும் தெப்பம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி அனுப்பானடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான ராஜீவ் காந்தி நகா், பகலவன் நகா், தமிழன் தெரு, ஆசிரியா் காலனி, ஆவின் பால் பண்ணை, ஐராதவநல்லுாா், பாபு நகா், கணேஷ் நகா், ராஜா நகர், சாரா நகா், வேலவன் தெரு, கிருபானந்தவாரியாா் நகா்,சுந்தரராஜ புரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனாா்புரம், பனையூா், சாமநத்தம், பெரியாா் நகா், தாய் நகர், கங்காநகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜா் தெரு, எஸ்.எம்.பி காலனி, முந்திாிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அதேபோல தெப்பம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள்,காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை,தங்கம் நகா், வடிவேல் நகா், மைனர் ஜெயில் பகுதிகள், அழகா் நகா், குருவிக்காரன் சாலை ,ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகா், புது மீனாட்சி நகா், சி.எம்.ஆா். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகா், நவரத்தினபுரம், பிஸ்சா் ரோடு, இந்திராநகா், பழைய குயவா்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை,மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குப்பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆா். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி.ரோடு, டி,டி,ரோடு, மீனாட்சி அவன்யூ மற்றும் திருமகள் நகா் ஆகிய பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் தொிவித்தாா்.