மக்காச்ேசாளம் குவிண்டால் ரூ.2,500-க்கு கொள்முதல்


மக்காச்ேசாளம் குவிண்டால் ரூ.2,500-க்கு கொள்முதல்
x

குண்டடம்பகுதிகளில் நடப்பாண்டு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். குவிண்டால் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

திருப்பூர்

குண்டடம்பகுதிகளில் நடப்பாண்டு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். குவிண்டால் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

மக்காச்சோளம்

கடந்த 10ஆண்டுகளுக்கு முன்புவரை மக்காச்சோளம் என்பது தீவனப் பயிராக கருதி விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். அதிகளவில் மக்காச்சோளத்தில் லாபம் பார்க்க முடியாது என்ற போதிலும் அதற்கானஇடுபொருள் செலவும் மிகவும் குறைவாகவே இருக்கும். கிராமப் பகுதிகளில் விவசாயத்துடன் கறவை மாடுகளை அதிகளவில் விவசாயிகள் வைத்துள்ளதால் அதற்கான தீனியை உற்பத்தி செய்யும் நோக்கில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வந்தது.

கோழிப்பண்ணைகள் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் கோழித்தீவனத்துக்கு முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் மாறியது. இதனால் மக்காச்சோளத்தின் தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் குவிண்டால் ரூ.500க்கும், ரூ.600-க்கும் கொள்முதல் செய்யப்பட்ட மக்காச்சோளத்தின் விலை ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டுவரை குவிண்டால் ரூ.1500 என்ற அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

கூடுதல் மகசூல்

கடந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் மக்காச்சோளத்தை படைப்புழுக்கள் தாக்கியதால் உற்பத்தி வெகுவாகக் குறைந்து போனது. இதனால் உடுமலை, பல்லடம், குண்டடம், குடிமங்கலம், பொங்கலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிநிறுவனங்கள் கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து வியாபாரிகள் மூலம் மக்காச்சோளத்தை தருவித்தனர். மேலும் விலையும் கணிசமாக அதிகரித்து குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் தீவனப் பயிராக இருந்த மக்காச்சோளம் தற்போது பணப்பயிராக மாறியது. இதனால் நடப்பாண்டு உடுமலை, தாராபுரம், குடிமங்கலம், குண்டடம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

வேளாண்மைத்துறையினரின் படைப்புழு தடுப்பு நடவடிக்கையால் படைப்புழு தாக்குதல் வெகுவாகக் குறைந்து போனதால் தற்போது மக்காச்சோளம் நன்கு வளர்ந்து கதிர்விடும் நிலையில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் கோழிப்பண்ணைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் வருங்காலத்திலும் மக்காச்சோளத்திற்கான தேவை அதிகமாகவே இருக்கும். தற்போது குவிண்டால் ரூ.2000 முதல் ரூ.2500வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அறுவடை சீசனில் சற்றே விலை குறையலாம், பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்றார்.


Related Tags :
Next Story