மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை கிடைக்குமா?


மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை கிடைக்குமா?
x

அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருப்பூர்

அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மக்காச்சோளம்

பல்லட வட்டாரத்தில் காய்கறிப் பயிர்கள், தானியங்கள், சோளம், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவையும் அதிகம். உள்ளூர் விளைச்சலில் பற்றாக்குறை உள்ளதால் பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது பல்லடம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நடக்கிறது. உள்ளூர் விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கரைப்புதூர் ஊராட்சி வடுகபாளையத்தை சார்ந்த விவசாயி மகேஸ்வரி கூறியதாவது:-

மக்காச்சோளப்பயிருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் படைப்புழு பாதிப்பு இல்லை. காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. தற்பொழுது தற்போது ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 2 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

கூடுதல் விலை

ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் கிடைக்கும். விவசாயம் சார்ந்த அனைத்து விலை உயர்ந்து விட்டதால் மக்காச்சோள கொள்முதல் விலை 2500 ரூபாய்க்கு மேல் இருந்தால் ஓரளவுக்கு லாபம் ஈட்ட முடியும். எனவே கூடுதல் விலைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story