1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவல்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story