கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்


கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குட்டையில் ஆண் பிணம் கிடந்தது. இது கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குட்டையில் ஆண் பிணம் கிடந்தது. இது கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தார்

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் இருந்து பணிக்கம்பட்டி செல்லும் சாலையில் குட்டை ஒன்று உள்ளது. இங்கு ஆண் பிணம் கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, குட்டையில் இறந்து கிடந்த நபரின் உடல் மீட்கப்பட்டது.

அப்போது 45 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால், அந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இறந்த நபரின் புகைப்படத்தை அந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கட்டிட வேலைகள் நடைபெறும் பகுதிகளில் காட்டி இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

குடியிருப்புகளுக்கு அருகே குட்டையில் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story