மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி மெயின் ரோடு மில்லத் நகரை சேர்ந்தவர் முகமது முஜாகீதீன் (வயது 23). இவர் நேற்று முன் தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த முகமது முஜாகீதீன் வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச்சென்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை துரத்தி பிடித்து அய்யம்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர் வலங்கைமான் தெற்கு அக்ரகாரத்தை சேர்ந்த சந்தோஷ் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story