அரசு பள்ளிக்குள் புகுந்து புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை எரித்தவர் கைது
ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த குமணந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.
அங்கு அவர் பீரோவில் வைத்திருந்த பள்ளி புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்து வந்து வெளியே போட்டு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. மேலும் மின் அளவீட்டு பெட்டி, பீரோ ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சிப்காட் போலீசார் விரைந்து வந்து குமரேசனை சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரித்தபோது அவர் அவ்வப்போது இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.