நிதி நிறுவனம் நடத்தி பணமோசடி செய்தவர் கைது


நிதி நிறுவனம் நடத்தி பணமோசடி செய்தவர் கைது
x

நிதி நிறுவனம் நடத்தி பணமோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ்குமாரை பிடித்து கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் சிலர் புகார் கொடுக்க தயாராகி வருகின்றனர்.


Next Story