ரேஷன் கடை விற்பனையாளரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது


ரேஷன் கடை விற்பனையாளரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
x

ரேஷன் கடை விற்பனையாளரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

காணை,

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூரை சேர்ந்தவர் ஷர்மா மனைவி எழிலரசி (வயது 36). இவர் கப்பூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்தபோது அங்கு குடிபோதையில் வந்த கப்பூர் காலனியை சேர்ந்த குமார் (32) என்பவர் எழிலரசியிடம், பணத்தையும், பொருளையும் ஒழுங்காக கொடுக்கிறீர்களா அல்லது ஏமாற்றுகிறீர்களா என்று கேட்டு கடைக்குள் புகுந்து எழிலரசியை திட்டி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து எழிலரசி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.


Next Story