தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் கீறியவர் கைது
தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் கீறியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்களுக்கு தலா ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீரமுத்து இறந்துவிட்டார். அவரது சொத்துக்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக வீரமுத்துவின் 2 மனைவிகளுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீரமுத்துவின் 2-வது மனைவி கொளஞ்சி(42) வீட்டு வாசலில் சமைத்துக் கொண்டிருந்தபோது, வீரமுத்துவின் முதல் மனைவியின் மகன் சோலைமுத்து(22), கொளஞ்சியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் கையில் கீறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கொளஞ்சி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து சோலைமுத்துவை கைது செய்தார்.