2 பசு மாடுகளை திருடியவர் கைது
பரதராமி அருகே 2 பசு மாடுகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தத்தை அடுத்த டி.பி.பாளையம் கிராமத்தை ஒட்டியபடி உள்ள ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், நாகராஜன் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் இரண்டு பசு மாடுகளுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த பசு மாடுகளை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்ல சரக்கு வாகனத்திற்கு காத்திருப்பதாக தெரிவித்தார்.
போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் டி.பி.பாளையம் கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 38) என்பதும், அதே கிராமத்தை சார்ந்த நாதமுனி மற்றும் முனிரத்தினம் ஆகியோரின் பசுமாடுகளை திருடி ஆந்திர மாநிலத்திற்கு விற்க கொண்டு செல்வதற்காக காத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அரிகிருஷ்ணனை கைது, இரண்டு பசு மாடுகளை மீட்டனர்.