பெண்ணிடம் நகை-பணம் திருடியவர் கைது


பெண்ணிடம் நகை-பணம் திருடியவர் கைது
x

பெண்ணிடம் நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள சாத்தனூர் கீழ ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் விஜயபுனிதா (வயது 37). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது அந்த திருமண மண்டபத்தில் அவரது கைப்பையை யாரோ திருடிச் சென்று விட்டனர். அந்த கைப்பையில் பணம், தங்க நகை மற்றும் செல்போன் இருந்து உள்ளது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் விஜயபுனிதா புகார் அளித்தார். அதன்பேரில், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், விஜயபுனிதாவின் நகை, பணத்தை திருடியது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19) என்பது தெரிய வந்தது. அதன்பேரில், அவரை போலீசார் கைது செய்தனர்.Next Story