கியாஸ் சிலிண்டர்களை திருடியவர் கைது


கியாஸ் சிலிண்டர்களை திருடியவர் கைது
x

மதுரையில் கியாஸ் சிலிண்டர்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 23). இவர், கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று, பழங்காநத்தம் பகுதியில் வீடுகளுக்கு கியாஸ் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, தன்னுடைய வாகனத்தில் வைத்திருந்த ஒரு கியாஸ் சிலிண்டர் திருடுபோனது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் மாதவன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ராமையா தெருவை சேர்ந்த ராமசந்திரன் (35) என்பவர் கியாஸ் சிலிண்டரை திருடியது தெரியவந்தது. இதுபோல், மதுரை முத்துப்பட்டி, எல்லீஸ் நகர் பகுதிகளில் கியாஸ் வினியோகம் செய்வதற்காக வைத்திருந்த சிலிண்டர்களை, ராமசந்திரன் திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story