கியாஸ் சிலிண்டர்கள் திருடியவர் கைது
ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை பகுதிகளில் கியாஸ் சிலிண்டர்கள் திருடியவர் கைது
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆறுதெங்கன்விளையில் சிவா (வயது25) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது டீக்கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திருட்டு போனது. இதுகுறித்து சிவா ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அழிக்கால் பிள்ளைத்தோப்பு அந்தோணி குருசடி தெருவை சேர்ந்த விஜயன் (32) என்பவர் கியாஸ் சிலிண்டரை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து விஜயனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.
விஜயனிடம் நடத்திய விசாரணையில் அவர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த தொழிலாளி அக்வின் (43) வீட்டில் வெளியே வைத்திருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 கியாஸ் சிலிண்டர்களையும் போலீசார் மீட்டனர்.