ஏ.டி.எம்.மில் கண்காணிப்பு கேமராவை திருடியவர் கைது
சிவகங்கை பஸ் நிலையம் அருகில் ஏ.டி.எம்.மில் கண்காணிப்பு கேமராவை திருடியவர் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை
சிவகங்கை பஸ் நிலையம் எதிரே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம்.ல் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கழட்டி கொண்டிருந்தார். இதை தன்னுடைய செல்போன் மூலம் கண்காணித்த வங்கி மேலாளர் முப்புடாதி இது குறித்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் சிவகங்கை அடுத்த வில்லூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ்(வயது 38) என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story