தங்க முலாம் பூசிய மோதிரத்தை அடகு வைக்க முயன்றவர் கைது


தங்க முலாம் பூசிய மோதிரத்தை அடகு வைக்க முயன்றவர் கைது
x

தங்க முலாம் பூசிய மோதிரத்தை அடகு வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

முசிறி:

முதியவர் கைது

முசிறி அருகே உள்ள தும்பலம் குடித்தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம்(வயது 37). இவர் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த ஒரு முதியவர், மோதிரத்தை அடகு வைத்து பணம் கேட்டுள்ளார். அந்த மோதிரத்தை பரிசோதித்தபோது, அது தங்க முலாம் பூசப்பட்டது என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் முசிறி போலீசார், அந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியை சேர்ந்த ராஜாராம் (72) என்பதும், பல்வேறு இடங்களில் போலி நகையை அடகு வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

2 பேர் சிக்கினர்

*ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ெதாழிற்பயிற்சி நிலைய மாணவரான கோகுல்(17) கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊா்வலத்தின்போது ஜீயபுரம் கடை வீதியில் இளைஞா்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருவெறும்பூர் சர்க்கார்பாளையம் மாதா கோவில் தெருவை சோ்ந்த ராஜ் கிறிஸ்டோபா் (19), விக்கி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

*துறையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை மேல்மட்ட நீர்த்தேக்க தொட்டியின் கீழ்புறம் இருந்த தேன்கூட்டை நேற்று நள்ளிரவு துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ வைத்து அழித்தனர்.

உணவு தயாரிக்க தடை

*புதுச்சேரியில் இருந்து கம்பி ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி சென்ற லாரி துவரங்குறிச்சியை அடுத்த முக்கன் பாலம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்ளிட்டோர் உயிர் தப்பினர்.

*திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆண்கள் கலை கல்லூரி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு நேற்று அந்த கல்லூரியின் உணவகத்தையும், கேண்டீனையும் ஆய்வு செய்ததில், அங்குள்ள கேண்டீன் மிகவும் அசுத்தமான முறையில் செயல்பட்டு வருவதோடு, அங்கிருக்கும் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வண்ணம் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அந்த கேண்டீனில் தற்காலிகமாக உணவு தயாரிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

*திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை மற்றும் லிங்கம் நகரில் உள்ள வீட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் சுமார் 13 கிலோ புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு, அந்த கடைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.


Next Story