நெல்லை பல்கலைக்கழகத்தில் டீசல் திருட முயன்றவர் கைது


நெல்லை பல்கலைக்கழகத்தில் டீசல் திருட முயன்றவர் கைது
x

நெல்லை பல்கலைக்கழகத்தில் டீசல் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

மானூரை அடுத்த சேர்வைக்காரன்புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருடைய மகன் முருகன் (வயது 38). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஜெனரேட்டர் அருகே 20 லிட்டர் கேனுடன் அமர்ந்து டீசலை திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பல்கலைக்கழக காவலாளி முகமது அலி, முருகனை பிடித்து பேட்டை போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.


Next Story