கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை
மேலூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொட்டாம்பட்டி
மேலூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஜாமீனில் வந்தார்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி புதுப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52). திருமணமாகி ஜெயா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த மே மாதம் தர்மசானபட்டியில் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ உதவியாளர் ராமையா என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். இந்தநிலையில் பாலகிருஷ்ணன் கடந்த 4-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
தற்கொலை
இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன், அங்குள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் எதிரே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கீழவளவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.