தாய்- மகன் தகராறை தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து


தாய்- மகன் தகராறை தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 19 Jan 2023 1:00 AM IST (Updated: 19 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தாய்- மகன் தகராறை தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர் பாளையத்தை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கும், தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாலசந்தர், தன்னுடைய தாயை தாக்கியதாக தெரிகிறது. இதனை பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபு (42) என்பவர் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பாலசந்தர், பிரபுவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த பிரபு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர்.


Next Story