கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகளாக தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது


கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகளாக தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில்  கைது
x

கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகளாக தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த தர்மராஜ் (வயது 34) என்பவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்

அதில் தர்மராஜ் மீது 2016-ம் ஆண்டு தரங்கம்பாடி தாலுகா போலீசார் கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததும், தலைமறைவான அவரை 7 ஆண்டுகளாக போலீசார் தேடி வருவதும் தெரிந்தது. இதுதொடர்பாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' தந்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தர்மராஜை கைது செய்து சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது பற்றி நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை வந்து கைதான தர்மராஜை அழைத்துச்செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story