கஞ்சா வழக்கில் போலீசார் பிடித்தபோதுபிளேடால் கையை அறுத்தவர் சிறையில் அடைப்பு
நெல்லையில் கஞ்சா வழக்கில் போலீசார் பிடித்தபோது பிளேடால் கையை அறுத்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). நெல்லை தச்சநல்லூரில் பதுங்கி இருந்த இவரை தனிப்படை போலீசார் கஞ்சா வழக்கு தொடர்பாக பிடித்தனர். அப்போது அவர் கையில் பிளேடால் வெட்டிக் கொண்டார். உடனே போலீசார் அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இவர் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி பின்னர் வெளியே வந்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சதாம் உசேன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story