ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம்: தனியார் பயிற்சி மைய மேலாளர் கைது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு


ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம்:  தனியார் பயிற்சி மைய மேலாளர் கைது  தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு
x

ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவத்தில் தனியார் பயிற்சி மைய மேலாளர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்த ஜெயபால் மகன் வினோத் பாபு (வயது 35). இவர் நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் எதிரில் உள்ள ஒரு தனியார் கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

தற்போது திருவதிகை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வேலைக்கு சென்று வந்த வினோத்பாபு, நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ரமணி பண்ருட்டி போலீசில் அளித்த புகாரில், எனது கணவருக்கு போன் செய்து பணி நிமித்தமாக பயற்சி மையத்தின் மேலாளர் குழந்தை வேலு திட்டினார். இந்த நிலையில் தான் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். எனவே அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில் தனியார் பயிற்சி மைய மேலாளர் குழந்தைவேலு மீது வினோத் பாபுவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து அவரை அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, கடலூர் மத்திய சிறைியல் போலீசார் அடைத்தனர்.

1 More update

Next Story