மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி ஆண்டு விழா - அமைச்சர் கீதாஜீவன் விருதுகள் வழங்கினார்


மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி ஆண்டு விழா - அமைச்சர் கீதாஜீவன் விருதுகள் வழங்கினார்
x
சென்னை

திருவொற்றியூர்,

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 24-வது ஆண்டு விழா பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், நாடார் மகாஜன சங்க இணைச்செயலாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, முன்னால் கூடுதல் பதிவு துறை தலைவர் ஆறுமுகநயினார், நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்டத் தலைவர் ஏ.தங்கம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜெகஜோதி ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அரசு துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கூடுதல் இயக்குனர் மின் ஆளுகை, கருவூலக் கணக்கு ஆணையரகம் நிருபாராணிக்கு உழைப்பால் உயர்ந்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் விருதும், பிளஸ்-2 மாணவி மகேஸ்வரிக்கு கல்விச்செம்மல் ஏ.காமாச்சிபாண்டியனார் விருதும் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் உறவின்முறை துணை தலைவர் மணலி எம்.பாலா, மணலி மண்டல குழு தலைவர் ஏ.விஆறுமுகம், கவுன்சிலர் ஏ.தீர்த்தி, முன்னாள் சின்னசேக்காடு சேர்மன் கரிகாலசோழன் மற்றும் மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை மகமை தரும் பண்டு பொதுச்செயலாளர் ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டார்.


Next Story