மனப்பத்தூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி-தேர் திருவிழா


மனப்பத்தூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி-தேர் திருவிழா
x

மனப்பத்தூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி-தேர் திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில். இந்த கோவில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் தீமிதி மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் மற்றும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள் தோறும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி மற்றும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் திரவுபதி அம்மன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வந்து சன்னதியை அடைந்தது. அப்போது வீடுகள் தோறும் பக்தர்கள் அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். இந்த திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


Next Story