ஆத்தங்கரை பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி ; 100 காளைகள் பங்கேற்பு


ஆத்தங்கரை பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி ; 100 காளைகள் பங்கேற்பு
x

ஆத்தங்கரைபட்டி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆத்தங்கரை பட்டியில் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ பெரிய கருப்பர், சின்ன கருப்பர், ஸ்ரீ மருதம் பிள்ளையார், ஸ்ரீ வைரவன் கோவில், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ கருப்பர், கண்ணிமார் கோவில் போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆத்தங்கரைபட்டி தலைவர் செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோரின் தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் விரட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இம்மஞ்சுவிரட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு ரெட்டியாங்கண்மாய், புதுகண்மாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர் . மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கும் மாடுகளைக் கொண்டு வந்த வீரர்களுக்கும் அனைத்து வீடுகளிலும் விருந்தோம்பல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மஞ்சுவிரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருப்பத்தூர் நகர போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story