எர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை
எர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமம் அருகே உள்ள நஞ்சேகவுண்டன்புதூரில் பழைமையான எர் அம்மன் கோவில் உள்ளது. இங்கு முருகன், கன்னிமார், கருப்பராயனுக்கு மேடை அமைத்து வர்ணங்கள் பூசி கடந்த 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, ஆணை பெறுதல் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எர் அம்மன் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story