செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு


செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அடுத்த செட்டியக்காபாளையத்தில் ஊருக்கு வடபுறத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தன. மேலும் புதிதாக கோபுரம் அமைத்து, முன் மண்டபம் அமைக்கப்பட்டது. அதில் விநாயகர், முருகன், மாகாளியம்மன் சிலைகள் வைக்கப்பட்டன. அதற்கான கும்பாபிஷேக விழா 2-ந்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. இதில் தினந்தோறும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் பால் தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், கனி வகையில் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம், மகா பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நேற்று மண்டல பூஜை நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story