அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை
அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தர்மசாஸ்தா கோவிலில் மண்டலபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அய்யப்ப சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடி சென்றனர்.
இதேபோல் தொண்டியில் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அய்யப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அய்யப்ப சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை செய்து தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story