மாண்டஸ் புயல் - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தம்


மாண்டஸ் புயல் - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தம்
x

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மாண்டஸ் புயல் காரணமாக கடைகள், உணவகங்களை மூடவும் உத்தரவிட்டுளளார் .

அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதி என்றும் புயல் கரையை கடந்த பிறகு வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதி என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story