மங்களூரு சம்பவம் எதிரொலி: சென்னை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை


மங்களூரு சம்பவம் எதிரொலி: சென்னை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை
x

மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்ததன் எதிரொலியாக சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை,

கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று எடுக்கப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி, சென்னை மாநகரம் முழுவதும் நள்ளிரவில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.

1 More update

Next Story