வேறு இடத்தில் குண்டை வெடிக்க வைக்க திட்டமிட்டு இருந்துள்ளனர்: கர்நாடக கூடுதல் டி.ஜி.பி


வேறு இடத்தில் குண்டை வெடிக்க வைக்க திட்டமிட்டு இருந்துள்ளனர்:  கர்நாடக கூடுதல் டி.ஜி.பி
x

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் குண்டை வெடிக்க வைக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. வேறு இடத்தில் தான் குண்டை வெடிக்க வைக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. குண்டை எடுத்து சென்றவரும் பலத்த தீக்காயம் அடைந்து உள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவரிடம் விசாரணை நடத்த சில நாட்கள் ஆகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story