வைக்கோலுக்கு தீ வைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வைக்கோலுக்கு தீ வைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

வைக்கோலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் பசு மாடுகளுக்கு தீவனமாக கோ சாலையில் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு அந்த வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கின. இதனை கண்டவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வைக்கோல் கட்டுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் கட்டுகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வைக்கோல் கட்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story