தண்ணீரின்றி காய்ந்து வரும் மணிலா பயிர்கள்


தண்ணீரின்றி காய்ந்து வரும் மணிலா பயிர்கள்
x

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீரின்றி காய்ந்து வரும் மணிலா பயிர்கள் விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலும் கிணற்று பாசனத்தையே நம்பி பயிரிடப்பட்டு வந்தாலும், சில கிராமங்களில் மழையை எதிர்நோக்கியே விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் சீர்பாதநல்லூர், ஆர்க்கவாடி உள்ளிட்ட கிராமங்களில் மணிலா உள்ளிட்ட பயிர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் சாகுபடி செய்தனர். ஆனால் மணிலாவுக்கு போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் அவை சுட்டெரிக்கும் வெயிலால் கருகி வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இப்பகுதிகளில் கிணற்றுத் தண்ணீர் இல்லாத காரணத்தால் மழையை எதிர்நோக்கியே மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். அதன்படி சிலமாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்த மணிலா பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. ஆனால் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. கடன் வாங்கி பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட மணிலா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவது கவலையாக உள்ளது என மனவேதனையோடு தெரிவித்தனர்.


Next Story