மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் அதிகாரியிடம் நூதன முறையில் பணம் மோசடி
மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் அதிகாரியிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டது.
திருநெல்வேலி
மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் கமாண்டன்டாக இருப்பவர் கார்த்திகேயன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், போலீஸ் டி.ஜி.பி. பேசுவதாக கூறி ஆன்லைன் பரிசு கூப்பன்களை வாங்க கூறியுள்ளார். இதனை நம்பிய கார்த்திகேயன் ஆன்லைனில் பணம் செலுத்தி பரிசு கூப்பன்களை வாங்கியுள்ளார்.
இதேபோல் பலமுறை பரிசு கூப்பன்களை வாங்க ஆன்லைனில் பணம் செலுத்தி சுமார் ரூ.7½ லட்சம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story