மணிப்பூர் வன்முறை - மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு


மணிப்பூர் வன்முறை - மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
x

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டம் வருகிற 06-08-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வள்ளுவர் கோட்டத்திலும், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு கோயம்புத்தூரிலும், காஞ்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு காஞ்சிபுரத்திலும், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மதுரையிலும், சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு சேலத்திலும், திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு நாகப்பட்டினத்திலும், நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திருநெல்வேலியிலும் மற்றும் விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திட்டக்குடியிலும் நடைபெறவுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மநீம மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story