ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் நீண்ட காலமாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் அக்கட்சியினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, காயிதே மில்லத் கல்வி-சமூக அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் தாவூத் மியாகான், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அதன்பின்னர் போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலைந்து சென்றனர்.


Next Story