மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாணியம்பாடியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாணியம்பாடி நகராட்சி பகுதியை பசுமையாக உருவாக்கும் நோக்கில் நேற்று வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் எதிரில் உள்ள இடத்தில் ெபாதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து த்துறை சார்பில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மாரிசெல்வி தலைமையில், குப்பைக்கொட்டிய இடத்தை தூய்மை செய்து மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. இதில் ஆலாங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், டாக்டர் ஏ.பி.ஜே. பசுமை புரட்சி அறக்கட்டளை இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சுகாதார ஆய்வாளர் சதிஷ் குமார் நன்றி கூறினார்.
இதேபோல், டாக்டர் ஏ.பி.ஜே. பசுமை புரட்சி அறக்கட்டளை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, வாணியம்பாடி புதூரில் வாழ்க வளமுடன் மகளிர் தையல் பயிற்சி பள்ளியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் முறையை செயல் படுத்தவும். நமது சந்ததிகளை காக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி செயலர் கேசவன் கலந்து கொண்டு மகளிர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடக்கி வைத்து மஞ்சள் பைகளை வழங்கினர். முடிவில் அறக்கட்டளை தலைவர் சேதுராமன் நன்றி கூறினார்.