சிங்கம்புணரி அருகேமஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் சாவு


சிங்கம்புணரி அருகேமஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:45 PM GMT)

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லியம்பட்டி கிராமத்தில் பொன்னழகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அம்மன் கோவில் அருகே தொழு அமைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு காளைகள் தொழுவில் அடைக்கப்பட்டன. சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி போன்ற பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து கிராமத்தின் சார்பில் கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு சிக்காமல் சீறிப்பாய்ந்தது.

பார்வையாளர் சாவு

மஞ்சுவிரட்டை காண வந்த எஸ்.புதூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35) என்பவர் மாடு முட்டி பலத்த காயம் அடைந்தார். அவரை சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ராமசந்திரன் இறந்தார். இதுகுறித்து எஸ்.வி மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

=======


Next Story