டாக்டர் உள்பட 3 பெண்களிடம் நகை, பணம் பறித்த காதல் மன்னன் கைது


டாக்டர் உள்பட 3 பெண்களிடம் நகை, பணம் பறித்த காதல் மன்னன் கைது
x
தினத்தந்தி 26 Aug 2023 1:15 AM IST (Updated: 26 Aug 2023 9:58 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக கூறி டாக்டர் உள்பட 3 பெண்களிடம் நகை, பணம் பறித்த காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பேரூர்

திருமணம் செய்வதாக கூறி டாக்டர் உள்பட 3 பெண்களிடம் நகை, பணம் பறித்த காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்.

விவாகரத்து

கோவை மாவட்டம் பேரூர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு கார ணமாக கணவன், மனைவி 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனால் ரவிச்சந்திரன் 2-வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார்.

இதற்காக அவர், ஆன்லைனில் உள்ள திருமண இணைய தளங்க ளில் தனது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய் தார். மேலும் அவர், மாப்பிள்ளை தேவை என்று விதவை பெண் யாராவது பதிவு செய்து உள்ளார்களா? என்று பார்த்து வந்தார்.

மொத்த வியாபாரி

அப்போது நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த விதவை பெண் ஒருவர் வரன் தேவை என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரவிச்சந்திரன், உடனே அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தான் மொத்த வியாபாரியான தனக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி சென்னை யில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூரு வில் பங்களா இருப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும் தான் விவகாரத்து பெற்று தனியாக வசிப்பதால் தங்களை திருமணம் செய்ய விரும்புவதாக அந்த பெண்ணிடம் கூறி உள்ளார். அதை நம்பிய அந்த பெண், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.

167 பவுன் நகை, ரூ.80 லட்சம்

அதன்பிறகு அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ரவிச்சந்திரன், தனக்கு திருமண தோஷம் இருப்பதால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

அதை நம்பிய அந்த பெண், ரவிச்சந்திரனுக்கு ரூ.80 லட்சம் ரொக்க பணம், ரூ.80 லட்சம் மதிப்பிலான 167 பவுன் நகையையும் கொடுத்து உள்ளார். நகை, பணத்தை கொடுத்த பிறகு அந்த பெண் ரவிச்சந்திரனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் என வந்தது.

கரூரில் கைது

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து அவரது செல்போனை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அவர், கரூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது அவருடன் பெண் ஒருவரும் இருந்தார். இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கோவைக்கு அழைத்து வந்து விசாரித் தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், ரவிச்சந்திரன், தனது மனைவி பிரிந்து 2-வது திருமணம் செய்ய பெண் தேடினார். அப்போது அவருடைய வலையில் வீழ்ந்த நாமக்கல்லை சேர்ந்த பெண்ணிடம் நைசாக பேசி பணத்தை பறித்து சென்றார்.

பெண் டாக்டர்

இதையடுத்து அவர் கரூர் பகுதியில் இருந்த போது கணவரை இழந்த பல் டாக்டருடன் ஆன்லைன் வாயிலாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவர், அந்த பெண் டாக்டரி டம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை உள்ளார். அதை நம்பிய பெண் டாக்டருடன், நெருங்கி பழகி ரவிச்சந்திரன் கணவன்- மனைவி போல் வாழ்ந்து உள்ளார்.

மேலும் ரவிச்சந்திரன், பெண் டாக்டரை ஏமாற்றி பணம் பெற்று அதில் 2 சொகுசு கார்கள் வாங்கி உல்லாசமாக வாழ்ந்து உள்ளார். அப்போது தான் தன்னை கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக ஓட்டல் மற்றும் விடுதிகளில் அடிக்கடி தங்கி உள்ளார். மேலும் அவர் பீளமேடு, திருப்பூர் உள்பட பகுதிகளிலும் கைவரிசை காட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசா ரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள்.

திருமண ஆசை காட்டி ஒருபெண்ணை ஏமாற்றியதாக பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story