மன்னார்குடி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்


மன்னார்குடி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
x

மன்னார்குடி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

திருவாரூர்

மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் மன்னார்குடி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற கோப்பை, பதக்கங்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

கலெக்டரிடம் வாழ்த்து

தர்மபுரி மாவட்டத்தில் மாநில அளவில் கால்பந்தாட்ட போட்டிகள் (17 வயதிற்குட்பட்டோர்) நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா சவளக்காரன் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர். ெவற்றி பெற்ற மாணவிகள் பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

தனியாக மைதானம் வேண்டும்

இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 40 அணிகள் பங்கு பெற்றன. அதில் நாங்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் பயிற்சி பெற எங்களுக்கு போதிய மைதான வசதியில்லை. இதனால் அருகில் உள்ள பகுதிகளில உள்ள பள்ளி, கல்லூரி மைதானம், மாவட்ட விளையாட்டு மைதானங்களில் தான் பயிற்சி பெற்றோம். எங்கள் பள்ளிக்கென்று தனியாக மைதானம் அமைத்து கொடுத்தால் மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க உதவியாக இருக்கும் என்று கலெக்டரிடம் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story