மன்னார்குடி கடைத்தெருவில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீசார்


மன்னார்குடி கடைத்தெருவில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீசார்
x

மன்னார்குடி கடைத்தெருவில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி கடைத்தெருவில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொருட்கள் வாங்க குவிந்தனர்

தீபாவளி பண்டிகை இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று மன்னார்குடி கடைத்தெருவில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.

ஆடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று மாலை முதலே கடைத்தெருவில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் மன்னார்குடி போலீசார் ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை எச்சரித்த வண்ணம் இருந்தனர். பாதுகாப்பு பணிகளை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியினையும் துணை சூப்பிரண்டு பார்வையிட்டார். அப்போது மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story