மாநில அளவிலான ஆக்கி போட்டியில் மன்னார்குடி அணி சாம்பியன்


மாநில அளவிலான ஆக்கி போட்டியில் மன்னார்குடி அணி சாம்பியன்
x

மாநில அளவிலான ஆக்கி போட்டியில் மன்னார்குடி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி

மாநில அளவிலான 8-வது ஆக்கி போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. பிரண்ட்ஸ் ஆக்கி கிளப் மற்றும் பேபி மீரா நினைவு கிளப் சார்பில் நடந்த இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடந்தன. போட்டிகளை மத்திய கலால்வரித்துறை சூப்பிரண்டு கருணாகரன், போட்டி ஒருங்கிணைப்பாளர் பெனட்டிக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இறுதிப்போட்டியில் மன்னார்குடி விவேக் நினைவு ஆக்கி கிளப்பும், தஞ்சை சிவா ஆக்கி கிளப்பும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் மன்னார்குடி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

தோல்வி அடைந்த தஞ்சை அணி 2-வது இடத்தை பிடித்தது. 3-வது இடத்தை மதுரை திருநகர் ஆக்கி கிளப் பெற்றது. முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே 12, 9 மற்றும் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.


Next Story