பல கி.மீ. தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்... மீனவர்கள் அதிர்ச்சி


பல கி.மீ. தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்... மீனவர்கள் அதிர்ச்சி
x

கரை ஒதுங்கியுள்ள மீன்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரை பகுதியில், பல கிலோமீட்டர் தூரத்திற்கு மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன. மரக்காணம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கடற்கரையோரம் ஒதுங்கியுள்ளன. இதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளதாகவும், மீன்களை உடனடியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story